சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தை கொண்டாடிய பின்னர் முதல் வேலை நாளான இன்று, ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிகழ்வில், ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட தீவின் அனைத்து பாகங்களிலுமிருந்து  ஓய்வூதிய நன்மைகளைப் பெறும் 710,000 இற்கும் மேற்பட்ட ஓய்வூதியர் சமூகத்தினருக்கு ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு.ஏ. ஜகத் டி டயஸ் தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அரச பணியில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அலுவலர்களுக்கும், நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அவர்களது வாரிசுகளுக்கும் ஓய்வூதியப் பலன்களை உறுதி செய்வதற்காக திரைக்குப் பின்னால் பெரும் பொறுப்புகளை சுமந்து வரும் அலுவலர்களுக்கும் அவர் மேலும் தனது நன்றியைத் தெரிவித்தார்.இதேவேளை, ஓய்வூதியத் திட்டத்தைப் பராமரிப்பதில் இத் திணைக்களம் அண்மைக்காலமாக பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள நிலையில், ஓய்வூதியர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், புதிய வருடத்துடன் நல்ல பாதுகாப்பான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கு அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

துப்புரவு சேவையில் ஈடுபடும் ஊழியர்களைப் பாராட்டுவதற்காக பணிப்பாளர் நாயகம் அறிமுகப்படுத்திய எண்ணக்கருவின் படி  ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சி, உள் மற்றும் வெளிச் சூழலை தூய்மையைப் பேணுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பிற்காக அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதற்காகவும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி.சுஜானி பெத்தவாடு மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

திணைக்களத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய சிற்றுண்டி மேசையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் நேர்முகத் தேர்விற்கு வருகை தந்த ஓய்வூதியர்களுக்கு சேவைகளை வழங்கும் வேளையில், ஓய்வூதியத்தை செயல்படுத்தும் சத்கரா பியசவில் நடாத்தப்படும் இக் குறுகிய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அலுவலர்களும் மற்றும் பல்வேறு விடயங்களுக்காகவும் வருகை தந்துள்ள திணைக்களத்தின் சேவை பெறுனர்களும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இணைந்துள்ளனர்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline