பொருளாதார மற்றும் சமூக ரீதியில் திருப்தி மிக்கதோர் ஓய்வூதியர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.

எமது நோக்கு
vision 1
 
vision 1

அரச சேவையில் ஓய்வூதியர்களுக்கும் அவர்களின் பயனாளிகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான முகாமைத்துவ முறைகளைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் அரச துறையினர் உள்ளடங்கிய சேவைபெறுநர்களினதும் சேவைவழங்குநர்களினதும் திருப்தியை உயர் மட்டத்தில் உறுதிப்படுத்தி, சட்ட ரீதியான  நலன்களை வழங்குதல்.

எமது செயற்பணி
 
நாங்கள் உங்களுக்கு
  • ஓய்வூதிய பிரமாணக் குறிப்பு, வி&அ ஓ கட்டளைச் சட்டம் (W&OP ordinance), வி&அ ஓ சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகளை அமுல்படுத்துவதனூடாக அவற்றுக்கிணங்க அரச ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு.
  • ஓய்வூதியம் தொடர்பான சட்ட கட்டமைப்புகள், விதிகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு இணங்க அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை வழங்குதற்கு.
  • அனைவருக்கும் மாதாந்த ஓய்வூதிய சலுகைகளை தொடர்ந்து தடையின்றி செலுத்துவதுடன் ஒரு தடவை மொத்த தொகையாக செலுத்தப்படும் நன்மைக்கான உரிமையை முறையாக வழங்குதற்கு.
  • அரச சேவை சேமலாப நிதியத்தை மேற்பார்வை செய்தல் அதன் நன்மைகளை வழங்குதல்.
  • அரசாங்கத்தின் சார்பாக விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்புகளை சேகரிக்கவும் மற்றும் பிற வருவாய்களை சேகரிக்கவும் நிர்வகிக்கவும்.
  • ஓய்வூதியத்தை கொடுப்பனவுடன் தொடர்புடைய ஓய்வூதியத்தை தயாரிக்கும் அலகுகள் மற்றும் வங்கிகள் மற்றும் இவற்றை இணைக்கும் வலைப்பின்னல் ஆகியவற்றுடன் பயனுள்ள இணைப்புகளை பராமரிக்கவும் தரமுயர்த்தவும்.
  • சமூக பாதுகாப்பின் உலகளாவிய போக்குகளை ஆராய்ந்து நவீன சமூக பாதுகாப்பு முறைமைக்கான கொள்கைகளை வகுக்க உதவுவதற்கு.
  • தலைமுறைகளுக்கிடையேயான உறவை உருவாக்குவதற்கு முன்னோடியாக திகழ்வதற்கு.
  • ஓய்வூதியர் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நலனை உறுதி செய்வதற்கு தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்துவதற்கு தனியார் மற்றும் அரசசாரா துறைகளின் பங்களிப்பைப் பெறுவதற்கு
எங்கள் விழுமியங்களான ஓய்வூதியர் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார திருப்தியை உறுதிப்படுத்த கைகொடுக்கும் அதே வேளையில், உள் மற்றும் வெளிப்புற பெறுநர்கள் மற்றும் கூட்டாளர்களின் தொழில்முறை திறன்களை மதித்தல், அவர்களின் திறன்களில் நம்பிக்கை வைத்தல், தொழிலில் அவர்களின் நேர்மைக்கு முக்கிய இடம் கொடுத்தல், நடைமுறைகள் மற்றும் தரநிலைகளை நிறுவுதல், நிதி செயல்முறைகளில் துல்லியத்தை உறுதி செய்தலுடன் தேவையான புதுமைகளை அறிமுகப்படுத்துதல், முகாமைத்துவ செயல்முறைகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நீர், மின்சாரம் ஆகியவற்றுடன் ஏனைய பௌதீக மற்றும் உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவித்தல்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline