வெதமுல்லை களனி, விடுமுறை விடுதி
பரபரப்பான நகர்ப்புற சூழலை மறந்து ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் உங்கள் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுங்கள்.
கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் கண்டி வீதியில் அமைந்துள்ள வெதமுல்லை களனியின் விடுமுறை விடுதிக்கு உங்களை வரவேற்கிறோம்.
- வணிக கூட்டங்கள் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்
- ஒன்றுகூடல்கள்
- ஓரு நாள் வெளித்தங்கல் (Day Outing)
- பயிற்சி நிகழ்சித்திட்டங்கள்
- திருமண வைபவங்கள்
- பிறந்த நாள் வைபவங்கள்
ரம்பொடை விடுமுறை விடுதி
உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க ஒரு கண்கவர் இடத்தைத் தேடுகிறீர்களா?
ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
கொழும்பில் இருந்து 147 கி.மீ தொலைவிலும், நுவரெலியாவிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியர்களுக்கான விடுமுறை விடுதி, இயற்கையின் அழகை ரசிக்க உங்களுக்கு மிகவும் திருப்திகரமான சேவைகளை வழங்குகிறது.
வெந்நீர் வசதி உட்பட சகல வசதிகளுடன் கூடிய 06 அறைகளைக் கொண்ட இந்த வளாகத்தில் 14 பேர் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.