சேவை பெறுபவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஊனமுற்றோர் ஓய்வூதியம் என்றால் என்ன?
- ஊனமுற்றோர் ஓய்வூதியம் என்பது, அரசுப் பணியில் உள்ள அலுவலர்களின் மறைவுக்குப் பிறகு, அந்தந்த அலுவலரின் குழந்தைகளாகவுள்ள, பிறப்பால் அல்லது 26 வயதை அடையுமுன், உடல் அல்லது உள குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் ஓய்வூதியமாகும்.
ஊனமுற்ற அனாதைகளின் ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை என்ன?
- அரச சேவையில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ தந்தை மற்றும் தாயார் இருவரும் இறந்தால், விண்ணப்பதாரர் ஊனமுற்றோர் ஓய்வூதியம் தயாரிப்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அந்தந்த பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் ஆரம்பகட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பின்னர் பிரதேச செயலகத்தால் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
ஊனமுற்ற அனாதை ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களுக்கு உரியதான தொடர்புடைய விவரங்களை நிரப்பும் நோக்கத்திற்காக பங்களிப்பவர் யார்?
- பொதுச் சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதியம் உரித்துடைய பதவியில் பணியாற்றும், விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்தில் அங்கத்துவம் பெற்ற ஆண்/பெண் அலுவலர்கள் பங்களிப்பாளர்களாக வரையறுக்கப்படுவார்.
ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
- ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதியம் தயாரிப்பதற்கான கோவை ஒன்று தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் அந்த கோவையை சரிபார்த்து, குறைபாடுகள் இருப்பின் கண்டறிந்து, பின்னர் ஒரு கடிதத்தை தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான ஆவணங்களை கோரி விண்ணப்பதாரருக்கு ஒரு பிரதியுடன் பிரதேச செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறான கடிதம் கிடைத்தவுடன் பிரதேச செயலகத்தில் உள்ள விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் மற்றும் ஊனமுற்றர்கள் உரிய ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊனமுறவர்களை மருத்துவ குழுவிடம் எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்?
- அந்தந்த பிரதேச செயலாளரின் பரிந்துரையை உள்ளடக்கிய ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்குவது உசிதம் என்ற அறிக்கை அடங்கலாக பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கையுடன் கூடிய கோவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிரதேச செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில், ஊனமுற்றவர்களிடம் இருந்து அண்மையில் பெறப்பட்ட சுகாதாரப் படிவம் 307ன் பிரதியுடன் மருத்துவ சபைக்கான விண்ணப்பம் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். .
ஊனமுற்ற அனாதைகளின் ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்குவதற்கான நடைமுறை திகதி என்ன?
- ஊனமுற்றோர் அனாதைகளுக்கான ஓய்வூதியத்தை ஊனமுற்றவரது வயதுடன், தொடர்புடைய ஊனம் எப்போது ஏற்பட்டது மற்றும் அதன் தன்மை ஆகிய விபரங்களுடன் அத்தகைய ஊனமுற்றநபர் முன்னிலைப்படுத்தப்படும் போது, அவர்களின் ஓய்வூதியத்தை வழங்குவதற்கான பரிந்துரையை மருத்துவ சபை வழங்குகிறது. பரிந்துரைக்கப்பட்ட நாளிலிருந்து, ஊனமுற்ற அனாதை ஓய்வூதியத்திற்கான உரிமை வழங்கப்படுகிறது.
ஊனமுற்ற அனாதைகளின் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் சூழ்நிலைகள் என்ன?
- விண்ணப்பதாரர் ஊனமுற்ற பிரிவின் கீழ் வரும் நிலையில் பாதிக்கப்படவில்லை என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் போது. (உ.ம் :- உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றால் அவதிப்படுதல்)
- 26 வயதிற்குப் பிறகு ஊனம் ஏற்பட்டது என்று மருத்துவ சபை முடிவு செய்யும் போது
- இயலாமை நிரந்தரமான நிலை அல்ல என்று மருத்துவ சபை முடிவு செய்யும் போது.
- ஊனமுற்ற அனாதைகளின் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பதாரி பங்களிப்பாளரின் சட்டப்பூர்வ திருமணத்தின் மூலமாக பிறந்த குழந்தையாக இல்லாதபோது
- விண்ணப்பதாரி பங்களிப்பாளரின் குழந்தை அல்ல என்பது உறுதிசெய்யப்படும் போது.
- 1983.08.01 ஆம் திகதிக்கு முன் நியமனம் பெற்று, வி&அ.ஓ க்கு பங்களிக்காத பெண் அலுவலரின் குழந்தைகளுக்கு, ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்க முடியாது.
*I,II மற்றும் III இல குறிப்பிடப்பட்ட ஊனமுற்ற அனாதைகள் ஓய்வூதியத்திற்கான கோரிக்கைகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களாகக் காட்டப்படலாம்.
சில ஊனமுற்ற குழந்தைகளுக்கு பாதுகாவலரை ஏன் நியமிக்க வேண்டும்?
- ஊனமுற்ற குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பையும், பராமரிப்பையும் மற்றும் அவர்களுக்கான ஊட்டச்சத்தையும் உறுதிசெய்யும் வகையில், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாத ஊனமுற்ற சிறார்களுக்கு ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்குவதற்கு பிரதேச செயலாளரின் பரிந்துரையின் பேரில் பொருத்தமான பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும்.
பாதுகாவலரை நியமிக்க என்ன ஆவணங்கள் தேவை?
- ஊனமுற்ற குழந்தையின் பாதுகாவலராக இருக்க விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் தொடர்பில் பிரதேச செயலாளரின் பரிந்துரை.
- பாதுகாவலரின் பூர்த்தி செய்யப்பட்ட சத்தியக்கடிதம்
- பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- பாதுகாவலரின் வங்கி கணக்கு புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- பாதுகாவலரின் கடவுச்சீட்டு அளவிலான சான்றளிக்கப்பட்ட புகைப்படம்
- 07/2020 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் படி பாதுகாவலருடனான உடன்படிக்கை
- பாதுகாவலரின் சத்தியக்கடிதம்
ஊனமுற்றவர்களுக்கு பொறுப்பான அலுவலர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஓய்வூதியம் யாருக்கு வழங்கப்படுகிறது?
- பிறப்பால் அல்லது 26 வயதுக்கு முன் உள அல்லது உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியில் உள்ள அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஊனமுற்றோர் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஊனமுற்றோர் மற்றும் அனாதைகளின் ஓய்வூதியம் வழங்குவதற்கு என்ன சட்ட ஏற்பாடுகள் உள்ளன
- விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய கட்கடளைச்சட்டத்தின் 29 ஆம் பிரிவு
- விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டத்தின் 7 ஆம் பிரிவு
- 01/2009 ஆம் இலக்க 2009.01.07 ஆம் திகதிய ஓய்வூதியச் சுற்றறிக்கை
- 1719/3 ஆம் இலக்க 2011.08.15 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி.
- 01/2009 (திருத்தம் I) ஆம் இலக்க 2009.12.02 ஆம் திகதிய ஓய்வூதிய சுற்றறிக்கை
ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகள் என்ன?
- ஆண்/பெண் பங்களிப்பாளர் ஓய்வூதிய உரித்துடைய பதவியை வைத்திருத்தல்.
- சம்பந்தப்பட்ட பதவியில் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்..
- ஆண்/பெண் பங்களிப்பாளர் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்துக்கு பங்களித்திருக்க வேண்டும்.
- ஆண்/பெண் பங்களிப்பாளர் இறந்திருக்க வேண்டும் மற்றும் வாழ்க்கைத்துணை இறந்திருக்க வேண்டும் அல்லது வேறொரு திருமணம் செய்திருக்க வேண்டும்.
- தொடர்புடைய குழந்தைக்கு மன அல்லது உடல் ஊனம் பிறக்கும் போது அல்லது 26 வயதை அடையும் முன் ஏற்பட்டிருக்க வேண்டும்.
- நிரந்தரமாக ஊனமுற்றவராகவும் அதன் காரணமாக தனக்கான வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாதவராகவும் இருக்க வேண்டும்
ஊனமுற்ற அனாதைகளின் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- இறப்பதற்கு முன் ஆண்/பெண் பங்களிப்பாளர் பெற்ற மாதாந்த ஓய்வூதியத்தை (அடிப்படை சம்பளம்+ வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு) ஓய்வூதியமாகப் பெற ஊனமுற்ற குழந்தைகளுக்கு உரிமை உண்டு.
- பங்களிப்பாளருக்கு பல ஊனமுற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டால், ஆண்/பெண் பங்களிப்பாளரின் மாதாந்த ஓய்வூதியதியம் அக் குழந்தைகளிடையே பிரிக்கப்பட்ட அவர்களுக்கான பிரிக்ப்பட்ட தொகையை ஊனமுற்ற அனாதை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு.
- தந்தை மற்றும் தாய் இருவரும் விதவைகள் / தபுதாரர்கள்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக இருந்தால், அதிக சம்பளம் 60% ஆகவும் குறைந்த சம்பளம் 40% ஆகவும் பெற உரிமை உண்டு.( 1719/3 ஆம் இலக்க 2011.08.15 திகதிய வர்த்தமானி அறிவிப்பின் படி).
- மேலும், 1719/3 ஆம் இலக்க 2011.08.15 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வருமானம்/ திருமணமானவர்/ குடும்பத்தின் வருமானம் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஓய்வூதியத்திலிருந்து ஒரு குறித்த சதவீதத்தை செலுத்துவது குறித்து முடிவெடுக்க அதிகாரம் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்ற அனாதை ஓய்வூதியம் எப்போது தொடங்கப்படும்?
-
குழுவிற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பதாரியைப் பரிசோதித்த பிறகு, ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க மருத்துவ சபை ஒப்புதல் அளித்தால், ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து கொடுப்பனவு செலுத்துதல் ஆரம்பிக்கப்படும்.
ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய பிற ஆவணங்கள் யாவை?
- ஊனமுற்ற ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவரின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
- விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு அளவிலான சான்றளிக்கப்பட்ட புகைப்படம்
- பாதுகாவலரின் கடவுச்சீட்டு அளவிலான சான்றளிக்கப்பட்ட புகைப்படம்
- விண்ணப்பதாரர் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரின் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்
- விண்ணப்பதாரர்/பாதுகாவலரின் வங்கி கணக்குப் புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- விண்ணப்பதாரரின் பெற்றோரின் திருமணச் சான்றிதழின் மூலப் பிரதிகள்
- விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் தாயின் இறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள்
- சுகாதார படிவம் 307 இல் மருத்துவ சான்றிதழ் (தற்போதைய இயலாமை குறித்து மருத்துவ அதிகாரியின் பரிந்துரை)
- ஊனமுற்ற அனாதைகள் ஓய்வூதியத்திற்கான முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் (அபா 01)
- பாதுகாவலரின் சத்தியக்கடிதம் (அபா 02)
- 7/2020 இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் படி பாதுகாவலருடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை
- அந்தந்த பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் முதற்கட்ட விசாரணை அறிக்கை
- பொருத்தமான பாதுகாவலர் தொடர்பில் பிரதேச செயலாளரின் பரிந்துரை
- முறையாக பூரணப்படுத்தப்பட்ட PD 4 விண்ணப்பம்
- மாதிரி கையெழுத்துப் படிவம்
- விண்ணப்பதாரர்/பாதுகாவலரின் தொலைபேசி இலக்கம்
- அனாதைகளின் வயது வரம்பிற்குள் தொடர்புடைய மருத்துவ அறிக்கைகள்
ஊனமுற்றவர் ஒருவரை மருத்துவக் குழுவுக்கு அனுப்புவதில் பின்பற்ற வேண்டிய செயல்முறை என்ன?
- 1/2009 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் படி ஊனமுற்றவர் மீது ஆரம்ப விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் கோவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
- கோவை பரிசோதிக்கப்பட்ட பின்னர், மருத்துவக் குழுவிற்கான விண்ணப்பம், 307 ஆம் இலக்க சுகாதாரப் படிவத்தின் அடிப்படையில் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகிறது.
- பின்னர் சுகாதார சேவைகள் திணைக்களம் ஊனமுற்ற நபரை முறையான மருத்துவ சபைக்கு அனுப்புகிறது மேலும் ஊனமுற்ற நபருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமா/கூடாதா என்பதை மருத்துவ சபை பரிந்துரை செய்யும்.
- மேலும் 01/2009 (திருத்தம் I) ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளின்படி, பிரதேச செயலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் தற்பொதும் பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு ஊனமுற்ற குழந்தைகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் பணியில் இருக்கும் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்பத்தில் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தாலோ சேவையாற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அவர்களை மருத்துவ சபைக்கு முன்னிலைப்படுத்தலாம்.
பொருத்தமான பாதுகாவலரை எவ்வாறு நியமிக்கலாம்?
- ஊனமுற்ற குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திறன் கொண்ட மற்றும் ஊனமுற்ற குழந்தை வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஒருவர், பாதுகாவலராக வெளிப்படுத்தும் விருப்பத்தை பயன்படுத்த முடியும். இதற்காக, பாதுகாவலராக நியமிக்கப்படுவதற்கு குறித்த நபர் பொருத்தமானவர் என்ற பிரதேச செயலாளரின் பரிந்துரை கட்டாயமாகும். ஊனமுற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிறுவனங்கள் / வீடுகள் / முதியோர் இல்லங்கள் / மடாலயங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முகாமையாளர் மற்றும் பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊனமுற்றவர் அனாதைகள் மற்றும் பாதுகாவலர்கள் வெவ்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசித்தாலும், நன்மைகளை உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆண்/பெண் பங்களிப்பு பல திருமணங்கள் செய்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
- ஒவ்வொரு திருமணம் தொடர்பான திருமணச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள், வாழ்க்கைத் துணையுடன் விவாகரத்து பெற்றிருப்பின் முற்றான தீர்வை (நீதிமன்றப் பதிவாளரால் சான்றளிக்கப்பட்டவை) அல்லது இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முந்தைய திருமணங்களின் குழந்தைகளின் விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (குழந்தைகளின் எண்ணிக்கை, வயது, அவர்கள் வேலை மற்றும் தொழில் செய்யும் திகதிகள், திருமண நிலை, அவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளின் பிரதிகள்).
ஆண்/பெண் பங்களிப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளி அனாதை ஆகியோரின் பெயரில் வேறுபாடுகள் இருக்கும்போது, ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
- பெயரின் எழுத்துக்களில் ஏற்படும் வேறுபாடு போன்ற சிறிய வேறுபாடுகள் பெயர்களில் காணப்பட்டால், இது தொடர்பான சத்தியக் கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பெயரின் பல எழுத்துகளிலோ அல்லது பெயரின் ஒரு பகுதியிலோ வேறுபாடுகள் காணப்பட்டால், கிராம அலுவலர் அறிக்கைகள், வாக்காளர் பதிவேட்டின் பிரித்தெடுப்பு, பிரமுகர்களின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை நடத்தி வித்தியாசத்தை சரிபார்த்து பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பெயரின் பல பகுதிகளில் வேறுபாடுகள் காணப்பட்டால், மேற்கண்ட முறையில் அத்தகைய வேறுபாட்டைச் சரிபார்க்க இயலாது என்பதால், சட்ட ஆவணங்கள் (தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள்) மூலம் அந்த வேறுபாட்டைச் சரிபார்க்குமாறு விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த திருத்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக ஒரு குறிப்பிட்ட விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டாலோ அல்லது மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவெண்டிய நிலை ஏற்பட்டாலோ, ஓய்வூதியத் திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
எங்கள் தொடர்புகளுக்கு,
தொ.பே.011 – 2332346 /1970
மின்னஞ்சல் -