பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளரான திரு. பிரதீப் யசரத்ன, அனைத்து ஓய்வூதிய சமூகத்தினரின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை நிர்வகிக்கும் அமைச்சின் கீழ் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்ய திணைக்களத்திற்கு இன்று (07.03.2024) வருகை தந்தார்.

செயலாளர் தனது வருகையின் போது ஓய்வூதிய விண்ணப்பத்தை பார்வையிட்டார், பின்னர் முதல் ஓய்வூதியம் செயல்படுத்தப்படும் பரவலாக்கப்பட்ட பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விதவைகள் மற்றும் அனாதைகள் பிரிவு, வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு, கொள்கைப் பிரிவு, பங்களிப்பு பிரிவு, உள்ளக கணக்காய்வுப் பிரிவு, முப்படைகள் பிரிவு, கணக்கு பிரிவு மற்றும் 1970 அவசர சேவைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்

கடந்த பல வருடங்களாக ஓய்வூதியத் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றியதன் பயனாக ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமக்கு பரந்த புரிதல் இருப்பதால், ஓய்வூதியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீவின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்பான ஓய்வூதிய செயல்முறையை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பை அவர் பாராட்டினார். மேலும் ஓய்வூதியரின் நலனை உறுதி செய்வதற்காக வினைத்திறனுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் சேவைகளை வழங்கியதற்காக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் திரு. ஏ ஜகத் டி டயஸ் உட்பட முழு அலுவலர்களுக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline