ஓய்வூதியம் கொடுப்பனவுக்கான பரவலாக்கப்பட்ட முறைமை

பரவலாக்கப்பட்ட முறைமையின் கீழ் ஓய்வூதியம் வழங்குவதற்கான முழு அதிகாரத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவருக்கு பரவலாக்குவது இதன் கருத்தாகும்.

எவ்வாறாயினும், ஓய்வூதியம் வழங்குவதற்கு முன்னர் அனைத்து அரசாங்க நிறுவனங்களாலும் ஓய்வுபெற்ற அலுவலர்களின் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்புவதன் முக்கிய நோக்கம் ஓய்வூதியருக்கு ஓய்வூதிய இலக்கம் பெற்றுத்தருதல், முதல் ஓய்வூதியத்தை செயல்படுத்துதல் மற்றும் பணிக்கொடை செலுத்துதல் போன்ற பணிகளை முடிப்பதாகும்.

அதன்படி, ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஓய்வூதிய விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் இருந்து தொடங்கும் அனைத்து பணிகளும் இயங்கலை முறைமையின் மூலம் செய்யப்படுகிறது. எனவே உரிய விண்ணப்பத்தை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான கால அவகாசத்தை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய முறைமையின் கீழ், அலுவலரை உரிய மரியாதையுடன் பணி ஓய்வுக்கு அனுப்புவது சாத்தியமாகியுள்ளது, அதே சமயம் பொதுமக்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி, ஓய்வுபெறும் நாளிலேயே உரிய ஓய்வூதியம் வழங்க முடியும்.

பரவலாக்கப்பட்ட முறைமையின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் நிகழ்வுகள்

  • கட்டாய ஓய்வு (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17)
  • விருப்ப ஓய்வு (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 2 மற்றும் 17)
  • மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெறுதல் (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 14)
  • தாதியர்கள், குடும்ப நலப் பணியாளர்கள், (முன்னர் மருத்துமாதுகள்) , பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் ஜெயிலர்கள் ஆகியோர், தமக்கு 50 வயதை எட்டிய திகதியிலோ அல்லது 20 ஆண்டுகள் சேவை நிறைவு செய்த நாளிலோ, எது முதலில் நிகழுகிறதோ அந்தத் திகதியில் சேவையில் இருந்து ஓய்வு பெறலாம். (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 14)
  • நீதித்துறை சேவையில் உள்ள அலுவலர்கள் ஓய்வு பெறல் (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 25)
  • முப்படைகளில் அலுவலர்களை பணி ஓய்வுபெறச் செய்தல்

 

பரவலாக்கப்பட்ட முறைமையின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் நிகழ்வுகள்

இந்த நோக்கத்திற்கான ஏற்பாடுகள் 03/2015 ஆம் இலக்க 24.04.2015 ஆம் திகதிய திகதிய சுற்றறிக்கை மேற்கூறிய திருத்தங்களைக் கொண்ட ஏனைய ஓய்வூதியச் சுற்றறிக்கைகள், மற்றும் 07/2018 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை ஆகியவறில் வழங்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியருக்கான தரவுகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஓய்வூதிய முகாமைத்துவ முறைமையில் (PMS) முழுமையாகவும் சரியாகவும் உள்ளிடப்பட்டபின், அச்சிடப்பட்ட PD 03 விண்ணப்பம் நிறுவனத் தலைவரால் முறையாகச் சான்றளிக்கப்பட்ட பின்னர் அந்த PD03 விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

  • ஓய்வூதிய கடிதத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • ஓய்வு பெறும் திகதிக்கு 06 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட சம்பளச் சிட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • சம்பள மாற்றம் கடிதத்தின் பிரதி (03/2016 பொ.நி. சுற்றறிக்கையின் படி)
  • வங்கி கணக்கு புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (இது தனிப்பட்ட சேமிப்புக் கணக்காக இருக்க வேண்டும்)

ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பிடப்பட்ட PD03 விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பின்னர் விண்ணப்பத்தில் குறைபாடுகள் இல்லை என கண்டறியப்பட்டால், ஓய்வூதிய முகாமைத்துவ முறைமையினால் ஓய்வூதிய இலக்கம் வழங்கப்படும்.

பின்னர் ஓய்வு பெற்ற அலுவலருக்கு ஓய்வூதியத்தை செயல்படுத்தும் நேர்காணலுக்கு வரும் திகதி மற்றும் நேரம் தெரிவிக்கப்படும். மேலும் இந்த அழைப்பு அந்தந்த நபரின் கையடக்க தொலை பேசிக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.

முதல் ஓய்வூதியத்தை செயல்படுத்துதல்

கடந்த காலங்களில் ஓய்வூதியம் பெறுபவர் ஓய்வூதியம் செயல்படுத்துவதற்காகவும், ஓய்வூதியம் செயல்படுத்தப்பட்ட பின் அது தொடர்பிலான நிர்வாகத் செயல்பாட்டு தெவைகளுக்காகவும் பல சந்தர்ப்பங்களில் ஓய்வூதிய திணைக்களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், ஓய்வூதியர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்தைப் பெற மீண்டும் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு செல்ல வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற அலுவலர் ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவதை மட்டுப்படுத்தி, அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து ஓய்வூதிய உரிமைகளையும் சிரமமின்றி உறுதி செய்யும் நோக்கில் சத்கார பியச செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விவரங்களை சரிபார்த்த பிறகு, ஓய்வூதியர் சத்கரா பியாசாவுக்கு அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் சத்கரா பியசவிற்கு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட திகதி மற்றும் நேரம் வழங்கப்படும் மற்றும் அவ்வாறு நியமிக்கப்பட்ட நாளில், தொடர்புடைய சேவைகளை வழங்க ஒரு அலுவலர் காத்திருப்பார்.

அப்போது, ஓய்வூதியரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப ஓய்வூதிய கொடைப்பத்திரம், ஓய்வூதியரின் அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியரின் குடும்ப விவரங்களை சரிபார்த்து அவரது விரல் அடையாளங்களை பதிவு செய்யும் போது ஓய்வூதியம் செயல்படுத்தப்படும். சரியான விவரங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், சத்கரா பியச மூலம் ஓய்வூதியத்தை செயல்படுத்த எடுக்கப்படும் காலம் கிட்டத்தட்ட 02-03 வாரங்கள் ஆகும். இதுபோன்ற செயல்பாட்டின் கீழ், ஓய்வூதியத்தை செயல்படுத்துவது விரைவுபடுத்தப்பட்டுள்ளது மற்றும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட தகவல்களும் இயங்கலையின் மூலமும் குறுந்தகவல் மூலமும் பரிமாற்றம் செய்யப்படுவதால், செயல்முறைக்கான செலவும் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு ஓய்வு பெற்ற அலுவலரும் தனது ஓய்வூதியத்தை செயல்படுத்த ஒருமுறை ஓய்வூதியத் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டும். நேர்காணலுக்கு வரும் அலுவலர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு.

  • அலுவலரின் தேசிய அடையாள அட்டை, அதன் பிரதி மற்றும் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
  • வாழ்க்கைத் துணையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
  • விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய அங்கத்தவர் அட்டை
  • வாழ்க்கைத் துணையிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தால் திருமணச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் முற்றான தீர்வையின் மூலப் பிரதி.
  • வாழ்க்கைத் துணை இறந்திருந்தால் இறப்பு சான்றிதழின் மூலப் பிரதி.
  • அலுவலருக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்கு முந்தைய திருமணங்கள் இருந்தால், முந்தைய திருமணங்கள் நடைமுறையில் இல்லை என்பதை நிரூபிக்கும் முற்றான தீர்வையின் மூலப் பிரதி அல்லது வாழ்க்கைத் துணையின் இறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
  • 26 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதி.
  • பெயர்களில் ஏதேனும் வேறுபாடு காணப்பட்டால், அத்தகைய வேறுபாடுகளை உறுதிப்படுத்த சத்தியக் கடிதம் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  (ஒரு சிறிய வித்தியாசம் மட்டும் இருப்பின் சத்தியக் கடிதம் மூலம் உறுதிப்படுத்த முடியும். பெயரில் புதிய பகுதிகளைச் சேர்ப்பதோடு மற்ற மாற்றங்களுக்கும், பிற ஆவணங்களைத் திருத்தம் செய்ய வேண்டும் மற்றும் பிறப்புச் சான்றிதழின் 13 வது கூட்டை திருத்த வேண்டும்.)
  • பிறக்கும் போது அல்லது 26 வயதை அடையும் முன் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால், மருத்துவ அறிக்கைகள், தொடர் சிகிச்சை அறிக்கைகள் மற்றும் நோய்களின் போக்கைப் பற்றிய அறிக்கைகள், அஞ்சல் அட்டை அளவிலான வண்ண புகைப்படம் (முழு படம்), சுகாதார அறிக்கை 307 மற்றும் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வாழ்க்கைத்துணையின் கடவுச் சீட்டு அளவிலான வண்ண புகைப்படம்.
  • பிறப்பு/திருமணம்/இறப்புச் பொன்ற சான்றிதழ்கள் அனைத்தும் பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட மூலப் பிரதியாக இருக்க வேண்டும். (இலவசமாக வழங்கப்படும் பிரதிகள் மூலப் பிரதிகளாக கருதப்படமாட்டாது).

மேலே உள்ள அனைத்து ஆவணங்களும் ஸ்கேன் செய்த பிறகு அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கு அலுவலர் பங்களிக்கவில்லை என்றால், இந்த ஆவணங்களை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை, அத்தகைய சந்தர்ப்பங்களில் ஓய்வூதியர்களின் அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படும்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline