முதல் ஓய்வூதியத்தை ஆரம்பிப்பது இந்த திணைக்களத்தின் முக்கிய சேவையாகும். ஓய்வூதியத்தை ஆரம்பித்துவைக்கும் எங்கள் பிரிவுகளின் நோக்கம், எங்கள் மதிப்புமிக்க ஓய்வூதியர்கள் சமூகத்தில் புதிதாக நுழையும் மூத்த அரசாங்க அலுவலர்களுக்கு திறமையானதும், வசதியானதும் மற்றும் தடையற்ற இலவச சேவையை வழங்குவதுமாகும். எங்களது இயங்கலை PMS வசதி மூலம் ஓய்வூதியத் திணைக்களத்தால் ஓய்வூதிய விண்ணப்பம் பெற்றப்பட்ட 1 மாத காலத்திற்குள் 95% புதிய ஓய்வூதியர்கள் முதல் ஓய்வூதியத் தொகையைப் பெறுகிறார்கள் என்பதை நாங்கள் பெருமையுடன் அறிவிக்கிறோம். எஞ்சிய 5% விண்ணப்பதாரிகள், பல்வேறு தெளிவற்ற சேவைக் காலங்கள் அல்லது அவர்களது சேவைப் பதிவேடுகளில் உள்ள பிற பிரச்சனைகள் காரணமாக ஓய்வூதியத்தைத் ஆரம்பிக்க அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். எவ்வாறெனினும் எங்கள் குழு ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையை முடிந்தவரை சீராக செய்ய தங்கள் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்கிறது

பரவலாக்கப்பட்ட முறை

இது பரவலாக்கப்பட்ட அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் நிறுவனத்தின் தலைவருக்கு முழு அதிகாரத்தையும் பரவலாக்குவதைக் குறிக்கிறது. எமது அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தும் பரவலாக்கப்பட்ட ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் முதல் ஓய்வூதிய தொடக்க செயல்முறையை கணிசமாக மேம்படுத்தியுள்ளோம்.

ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், ஓய்வு பெற்ற அலுவலர்களின் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை அனைத்து அரசு நிறுவனங்களும் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்புவதன் நோக்கம், ஓய்வூதியம் பெறுபவருக்கு ஓய்வூதிய இலக்கத்தைப் பெறுதல், முதல் ஓய்வூதியத்தை செயல்படுத்துதல் மற்றும் பணிக்கொடை வழங்குதல் போன்ற பணிகளை முடிக்க வேண்டும்.

மையப்படுத்தப்பட்ட முறை

ஓய்வூதியம் வழங்கும் அதிகாரத்தை நிறுவனத் தலைவரிடம் வழங்குவதற்குப் பதிலாக ஓய்வூதியத் திணைக்களத்திடம் வைத்திருப்பது மையப்படுத்தப்பட்ட முறை மூலம் ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிறப்பு ஆகும்.

எங்கள் மதிப்புமிக்க ஓய்வூதிய சமூகத்தின் தேவைக்கேற்ப நீட்டிக்கப்பட்ட சேவையை வழங்குவதற்காக, இந்த அமைப்பின் கீழ் தொடர்புடைய ஆவணங்களை எங்கள் அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

எனவே, மையப்படுத்தப்பட்ட முறையில் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline