ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவானது, வேறொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்கும் அல்லது இலங்கையுடன் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் அல்லது இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெளிநாடு செல்லும் இலங்கை ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்கிறது. வெளிநாட்டு ஓய்வூதியங்கள் 1/2018 ஓய்வூதிய சுற்றறிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.

01/2018 சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (பதிவிறக்க இங்கே சொடுக்கவும், சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு பின்வரும் ஓய்வூதியர்களுக்கு வெளிநாட்டு ஓய்வூதிய வகைப்படுத்தலின் கீழ் கொடுப்பனவு செய்கிறது;

  • வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓய்வூதியர்கள்
  • இலங்கையுடன் இரட்டைக் குடியுரிமையை வைத்திருத்தல்
  • இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஓய்வூதியர்கள்
Download Circular Message 01/2018)

வெளிநாட்டு ஓய்வூதிய கொடுப்பனவுகள் இலங்கை வங்கி – மெட்ரோபொலிட்டன் கிளை, ஹட்டன் நஷனல் வங்கி – பஞ்சிகாவத்தை கிளை, பான் ஏசியா வங்கி – பொரளை கிளை, மக்கள் வங்கி – குயின்ஸ் கிளை மற்றும் தேசிய சேமிப்பு வங்கி – மாளிகாவத்தை கிளை ஆகியவற்றினால் பராமரிக்கப்படும் விசேட வங்கிக் கணக்கின் ஊடாக மட்டுமே செலுத்தப்படுகின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து ஓய்வூதியர்களும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து அந்தந்த ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதிக்குள் தமது வருடாந்த உயிர் வாழ்ச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். வெளிநாட்டு ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத் திணைக்களத்தின் முன்னரங்க செயற்பாட்டு மேசைகளுக்குச் சென்றோ அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவோ தமது உயிர் வாழ்ச் சான்றிதழை தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

சேவைத் தேவையின் பேரில் கப்பலில் செல்லும் பிரதேச செயலகங்களால் கொடுப்பனவு செய்யப்படுகின்ற ஓய்வூதியர்கள், இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட தங்களின் உயிர்வாழ்ச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். 

ஆறு (06) மாதங்களுக்கு விஞ்சாது ஒரு தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்லும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் வெளிநாட்டு ஓய்வூதியமாக கருதப்பட மாட்டாது மேலும் அவர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் வழக்கமான வழிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

தபால் முகவரி

வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு,
ஓய்வூதியத் திணைக்களம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline