இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய மூன்று ஆயுதப் படைகள் நிறுவப்பட்டுள்ளன. 17 ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் இராணுவச் சட்டம், 41ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் விமானப்படைச் சட்டம் மற்றும் 34 ஆம் இலக்க 1950 ஆம் ஆண்டின் கடற்படைச் சட்டம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஏற்பாடுகளுக்கமையவும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பவும் முப்படையினருக்கும் ஆயுதப்படை சேவைகள் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டத்தின் 29 மற்றும் 155 பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இராணுவப் பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை, விமானப்படைச் சட்டத்தின் பிரிவு 29 மற்றும் 155 ஆம் பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட விமானப்படை பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை மற்றும் கடற்படை சட்டத்தின் 161 ஆம் பிரிவால் உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் கடற்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டக் கோவை ஆகியவை ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய சட்ட ஆதாரங்கள் ஆகும்.
ஆயுத சேவைகள் பிரிவு மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம்
ஆயுதப்படைகளின் ஓய்வூதியத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் (அஞ்சல் வகை 07)
இதன் கீழ், பணிக்கொடை வழங்கப்பட்டு, அவர்களின் கூட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்ட இராணுவ அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அலுவலர்களின் ஆயுத சேவை ஓய்வூதியத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன, மேலும் அவர்களுக்கு (படிகள் மற்றும் பிற கொடுப்பனவுகளின் திருத்தம் தொடர்பான விடயங்கள், மேலும் அவர்களின் தரத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான உரிமை போன்றவை.)
தகுதியுள்ள நபர்கள் :
- ஏற்கனவே சேவை ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்
- ஓய்வு பெறுவதற்கு மட்டுமே ஒரு உரிமையை வழங்கி அனுப்பப்பட்ட இராணுவ உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- திருத்தத்திற்கான விண்ணப்பம்
- முந்தைய கொடுப்பனவுகள் தொடர்பான கொடைப் பத்திரப் பிரதி
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்த விண்ணப்பித்த படிவம்
திருத்தம் (55 வயதில் செய்யப்பட்டது) (அஞ்சல் வகை 25)
ஊனமுற்றமை காரணமாக ஓய்வு பெற்று 55 வயது வரை ஊதியம் பெறும் இராணுவ உறுப்பினர்கள் 55 வயதில் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்யப்பட்டும்.
தகுதியுள்ள நபர்கள் :
- ஊனம் காரணமாக ஓய்வு பெற்ற பின்னர் 55 வயது வரை ஊதியம் பெறும் இராணுவ உறுப்பினர்கள்
- யுத்தப் பகுதிகளில் சேவையின் போது ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- திருத்தத்திற்கான விண்ணப்பம்
- முந்தைய கொடுப்பனவுகள் தொடர்பான கொடைப்பத்திர பிரதிகள்
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்த படிவம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
10/12 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ளவர்களின் ஓய்வூதியம் (அஞ்சல் வகை 11)
10/12 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையில் உள்ள மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. வகை 59 இன் கீழ் பணம் செலுத்தப்படுகிறது.
2014.12.17 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், 2014.12.17 ஆம் திகதிக்கு பிறகு ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், ஓய்வு பெறும் திகதியின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படுகிறது.
இந்த சேவை ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்கும் போது, ஓய்வு பெறும் போது பெறப்பட்ட சம்பளத்தில் இருந்து 60% சதவீதம் வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் :
- 10/12 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்.
- 2014.12.17 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், 2014.12.17 ஆம் திகதிக்கு பிறகு ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், ஓய்வு பெறும் திகதியின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- சேவை ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான ஒப்புதலைப் பிரயோகிப்பதற்கான ஒரு உறுதிமொழி (அரசாங்கத்திடம் திரும்பப் பெறுதல்)
- சம்பள விவரங்கள்
- ஆயுதப்படை ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால் சத்தியக் கடிதம்
சேவைகள் ஊனமுற்றோர் ஓய்வூதியம்- (அஞ்சல் வகை 14)
10/12 க்கும் அதிகமான சேவைக் காலத்தை நிறைவு செய்து, சேவை நிபந்தனைகள் /பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மருத்துவ ரீதியாக ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள், சேவை ஓய்வூதியத்துடன் ஊனமுற்ற ஓய்வூதியத்திற்கான உரிமையைப் பெறுகின்றனர்.
தகுதியுள்ள நபர்கள் :
- 10/12 க்கும் அதிகமான சேவைக் காலத்தை நிறைவு செய்து, சேவை நிபந்தனைகள் /பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மருத்துவ ரீதியாக ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (தனி நபர்)
- ஆயுதப்படை ஓய்வூதியம் செலுத்தும் படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
இராணுவத்தின் மரணக் பணிக்கொடை (அஞ்சல் வகை 16)
சேவையில் இருக்கும் போது இறக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- 5 வருடங்களுக்கும் மேலான சேவைக் காலத்தை உடைய மற்றும் பணிக்கொடைக்கான உரிமையுள்ள சேவையின் போது இறக்கும் இராணுவ உறுப்பினர்கள்.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- இறப்பு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- விண்ணப்பப் படிவம்- படைகள் 01
சேவைப் பணிக்கொடை (அஞ்சல் வகை 16)
20/22 ஆண்டுகளுக்கும் குறைவானதும் 10 ஆண்டுகளுக்கு மேலும் சேவைக் காலத்தை முடித்த இராணுவ அலுவலர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- 20/22 வருடங்களுக்கும் குறைவானதும் 10 வருடங்களுக்கு மேலானதும் சேவைக் காலத்தை முடித்த இராணுவ அலுவலர்கள்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (தனிநபர்) (இவ/தேசேவ/மவ)
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
ஊனமுற்றோர் ஓய்வூதியம் (அஞ்சல் வகை 13)
சேவையின் போது அல்லது யுத்த நடவடிக்கைகளின் போது விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டுஊனமுற்ற ஆயுதப்படை உறுப்பினர்கள், அவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் என்று இராணுவ மருத்துவ சபை தீர்மானித்த பின்னர் இராணுவம்/கப்பற்படை/விமானப்படை தளபதிகளால் பரிந்துரைக்கப்பட்டது, ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த ஊனமுற்றோர் ஓய்வூதியம் அவ் அலுவலர்களுக்கு வழங்கப்படும் சேவை ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள நபர்கள் :
- சேவையின் போது அல்லது யுத்த நடவடிக்கைகளின் போது விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டுஊனமுற்ற ஆயுதப்படை உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
Accordion
சேவையில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட பின்னர் இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- சேவையில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட பின்னர் இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் தங்கி வாழ்வோருக்கு வழங்கப்படும்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- அலுவலரின் இறப்புச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- அலுவலரின் பிறப்புச் சான்றிதழ்
- குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழின் பிரதிகள்
- வங்கி புத்தகங்களின் பிரதிகள் (விதவைகள் மற்றும் குழந்தைகள்)
- Aதேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி (விதவைகள்)
- தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி ( அலுவலரின் )
- பிரதேச செயலாளரின் அறிக்கை
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
- பெற்றோரின் திருமணச் சான்றிதழ் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் (அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் வங்கி புத்தகங்களின் பிரதிகள் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- படிவம்- படைகள் 01
- முன்பு செலுத்தப்பட்ட பணிக்கொடைக்கான கொடைப்பத்திரம்
சேவை ஊனமுற்றோர் ஓய்வூதியம் (மீள்நியமனம்) (அஞ்சல் வகை 20)
மீள்நியமனத்தின் பிறகு பணியாற்றும் போது ஊனமுற்ற அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் சேவை ஊனமுற்ற ஓய்வூதியம் என்று அழைக்கப்படுகிறது .
தகுதியுள்ள நபர்கள் :
- மீள்நியமனத்தின் பிறகு பணியாற்றும் போது ஊனமுற்ற அலுவலர்களுக்கு
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- அலுவலரின் பிறப்புச் சான்றிதழ்
- தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் பிரதி
- அலுவலரின் 03 புகைப்படங்கள் (சான்றளிக்கப்பட்டவை)
- திறைசேரி 148 (02 பிரதிகள்), 147 ( பிரதி)
- முன்பு செலுத்தப்பட்ட பணிக்கொடைக்கான கொடைப்பத்திரம்
- படிவம்- படைகள் 01
- விருப்ப பிரகடனத்தின் 02 பிரதிகள்
- கையொப்பத்தின் 02 பிரதிகள்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
- ஊனம் பற்றிய மருத்துவ சபையின் அறிக்கை
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்