பொதுச்சேவையில் ஓய்வூதிய உரித்தற்ற ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியாக பொது சேவை வருங்கால வைப்பு நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் நோக்கங்கள் விரிவாக்கப்படுவதுடன் அரச சேவையில் பணிபுரியும் நிரந்தர, சாதாரண, நாளாந்த ஊதியம் பெறுவோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சி பெற்றவர்கள் போன்ற பலதரப்பட்ட சேவைப் பிரிவினர் பலன்களைப் பெற முடியும்.
அரச சேவையில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை எனவே அத்தகைய ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நிதியம் அவசியமானதாக இருந்தமையால், 1942 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பொதுச் சேவைகள் வருங்கால வைப்பு நிதியக் கட்டளைச்சட்டத்தின் கீழ் பொதுச் சேவைகள் வருங்கால வைப்பு நிதியம் நிறுவப்பட்டது.
நிரந்தர, சாதாரண, ஒப்பந்த, பயிற்சி மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள் போன்று பலதரப்பட்ட சேவைப் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் நிதியத்தின் நலன்களை விரிவுபடுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலமும் அவ்வப்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலமும் நிதியின் நோக்கங்களும் இலக்குகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
நிதியத்தில் உறுப்பினராக இருக்க தகுதியான அலுவலர்கள்
- ஓய்வூதியம் பெற தகுதியற்ற பொது சேவையில் உள்ள நிரந்தர ஊழியர்கள்
- தற்காலிகமாக மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள்
- தினசரி ஊதியம் அல்லது மாத ஊதியம் பெறும் ஓய்வூதியம் பெற உரிமை இல்லாத அரசு ஊழியர்கள்
- ஓய்வு பெற்றவர்கள் அல்லாத ஆனால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்.
- ஓய்வூதியம் பெற உரிமை இல்லாத அல்லது ஓய்வூதியமற்ற இலங்கை ஊழியர், இலங்கையின் வெளிநாட்டு இராஜதந்திர தூதுக்குழுவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்
- அமைச்சர்களுக்கான மற்றும் மாகாண சபைகளின் அமைச்சர்களுக்கான பணியாளர் குழுவில் பணியாற்றும் ஊழியர்கள்
உறுப்பினர் தகுதி பெறாத அலுவலர்கள்
- அரசபணியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள்
- 60 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள்
- அமைச்சர்களின் அலுவலக பணியில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற அரச அலுவலர்கள்
- 'q' அட்டவணையைச் சேர்ந்த மற்றும் தொடர்புடைய பதவிகளில் 05 ஆண்டுகள் சேவையை முடித்த அமைச்சர்களின் பணிக் குழுவில் உள்ள அலுவலர்கள்
உறுப்பினராதல் /பதிவு செய்தல்
02/2017 ஆம் இலக்க 2017.10.06 ஆம் திகதிய ஓய்வூதிய சுற்றறிக்கையின் மூலம் பொதுச் சேவைகள் வருங்கால வைப்பு நிதியத்தில் பதிவு செய்வதற்கும் பங்களிப்புகளின் விவரங்களை இற்றைப்படுத்துவதற்கும் இயங்கலை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களிப்புகளை மீளப் பெறுதல்
- இந்த நிதியத்தில் அங்கத்தவராக உள்ள அனைத்து அலுவலர்களும் தங்களது மாத சம்பளத்தில் இருந்து கட்டாய பங்களிப்பாக 8% நிச்சயமாக செலுத்த வேண்டும்.
- Tஅலுவலர் பணியாற்றும் நிறுவனம், கட்டாயப் பங்களிப்பிலிருந்து 1.5 க்கு சமமான தொகையை அதாவது 12% இனைஅரசாங்கத்தின் பங்களிப்பாக இந்த நிதியத்துக்கு அனுப்ப வேண்டும்
- 2023.01.01 ஆம் திகதி தொடக்கம் நிதியத்துக்கு அறவிடப்பட்ட அனைத்து மாதாந்த பங்களிப்புகளும் அண்ணளவாக ரூபாய்க்கு கணக்கிடப்பட வேண்டும்.
நிதியத்துக்கு பங்களிப்புகளை அனுப்புவதற்கான முறை
- மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பங்களிப்புகள் அனுப்பப்படும் போது 02/2017 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கைக்கமைய, கட்டாய பங்களிப்பு (8%) மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பு (12%) ஆகியவை காசோலைகள் மூலம் மாத்திரமே அனுப்பப்பட வேண்டும்.
- 'தவிசாளர், பொது சேவைகள் வருங்கால வைப்பு நிதியம்' எனும் பெயருக்கு காசோலைகள் வழங்கப்பட வேண்டும்
அங்கத்துவம் இரத்து செய்யப்படும் சந்தர்ப்பங்கள்/ நன்மைகளுக்காக உரிமைகோரல்கள் செய்யப்படக்கூடிய சந்தர்ப்பங்கள்
- ஓய்வூதிய உரித்துடைய நிலையைப் பெறுதல்
- 60 வயது நிறைவடைதல்
- பதவியை இராஜினாமா செய்தல்
- பதவியை ஒழித்தல்
- ஒப்பந்த அடிப்படையில் சேவை காலம் முடிவடைதல்
- ஒழுக்காற்று அடிப்படையில் சேவையிலிருந்து நீக்கம்
- பதவி வெறிதாக்கல்.
-
அலுவலரின் மரணம்
இயங்கலை வழிமுறை மூலம் நிதியத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, மேலும் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, நன்மைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் அதற்கான அனைத்து படிவங்களும் 07/2015 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
போ.சே.வை.நி இன் பலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய பிற ஆவணங்கள்
- பொ.சே.வை.நி க்கான பங்களிப்புடன் கூடிய நியமனக் கடிதம் (முதல் நியமனக் கடிதம்)
- சேவை முடிவுறுத்தலை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்கள்,
- நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவிக்கான நியமனக் கடிதம் அல்லது,
- அலுவலர் இராஜினாமா செய்யும் பட்சத்தில் இராஜினாமா செய்வதற்கான ஒப்புதல் கடிதம் அல்லது,
- சேவையை முடித்ததற்கான கடிதம்/ ஒப்பந்த சேவையை முடித்ததற்கான கடிதம் அல்லது,
- உரிய வயதை அடையும் பட்சத்தில் பங்களிப்பாளரின் பிறப்புச் சான்றிதழ்
- பங்களிப்புகளின் அறவீட்டு அறிக்கை
- பங்களிப்பாளரின் பெயரில் பராமரிக்கப்படும் செயற்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கிற்காக வழங்கப்பட்ட அரச வங்கியின் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதி
- மேற்கூறியவற்றைத் தவிர, பங்களிப்பாளரின் மறைவு தொடர்பில் பின்வரும் ஆவணங்கள்,
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- பதவிக்கு விடுமுறை
- அதிகாரியின் மரணம்
பங்களிப்பாளரிடமிருந்து அரசுக்கு ஏதேனும் தொகை நிலுவைகள் இருந்தால், அந்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு காசோலை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டவேண்டும். எனவே, பங்களிப்பாளரிடமிருந்து நிலுவைத் தொகைகள் குறித்த விரிவான அறிக்கை, பங்களிப்புகளைத் திரும்பப்பெறும் போது, பொ.சே.வை.நி 100 படிவத்தின் ஊடாக பதவிநிலை அலுவலரால் கட்டாயமாகச் சான்றளிக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.
உறுப்புரிமை இரத்து செய்யும் போது பெறப்படும் நன்மைகள்
- பணியில் இருந்து விலகுதல், நிர்ணயிக்கப்பட்ட வயதை நிறைவு செய்தல், பதவியை இல்லாது ஒழித்தல், ஒப்பந்த சேவை காலம் முடிவடைதல், இறப்பு போன்ற காரணங்களுக்காக பங்களிப்புகளை நிறுத்துபவர்கள், வரவு வைக்கப்பட்டுள்ள பங்களிப்புகள் மற்றும் அவற்றின் கூட்டு வட்டி மற்றும் அரசாங்கத்தின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து அவற்றைப் பெற உரிமை உண்டு. (பொது சேவைகள் வருங்கால வைப்பு நிதியத்தின் பிரிவு 14)
- இந்த பிரிவின் கீழ் நன்மைகளைப் பெற்ற ஒரு உறுப்பினர், பின்னர் ஓய்வூதிய உரித்துடைய சேவையில் நியமனம்பெற்றால் , ஓய்வூதிய உரித்துடைய சேவைக் காலத்தினைக் கணிக்கும் சந்தர்ப்பத்தில், பொது சேவை வருங்கால வைப்பு நிதியத்துக்கான பங்களிப்பின் கீழ் வரும் காலத்தை உள்ளடக்குமாறு கோரிக்கை வைத்தால், அத்தகைய அலுவலர் அரசாங்கத்தின் ஊக்கத்தொகை மற்றும் கூட்டு வட்டி அடங்கலாக 4% வட்டியுடன் சேர்த்து, அத்தொகையை மேலே பெற்ற திகதியிலிருந்து அவற்றைத் திருப்பிச் செலுத்தும் திகதி வரை தொடர்புடைய தொகையை திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டால் அதற்கான கால அளவு ஓய்வூதியக் செவைக் காலத்தினுள் சேர்த்து கணக்கிடுவதற்குப் பொருந்தும்.
-
ஒழுக்காற்று காரணங்களால் ஏற்படும் சேவை நிறுத்தம், பதவி வெறிதாக்கம் போன்ற காரணங்களுக்காக பங்களிப்பை நிறுத்துபவர்கள், பங்களிப்பு மற்றும் தொடர்புடைய கூட்டு வட்டியைப் பெற மட்டுமே தகுதியுடையவர்கள். மேலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கு இந்த சேவை காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
(பிரிவு 16- பொது சேவைகள் வருங்கால வைப்பு நிதியம்) -
ஒரு அலுவலர் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவிக்கு நியமிக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட கூட்டு வட்டியுடன் அலுவலரால் வரவு வைக்கப்படும் பங்களிப்புகளைப் பெற அவர் உரிமையுடையவர். இந்த சேவைக் காலம் ஓய்வூதியத்தை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பிரிவு 20- பொது சேவைகள் வருங்கால வைப்பு நிதியம்) - ஓய்வூதியம் பெறும் அந்தஸ்து பெறும் உறுப்பினர்களுக்கு, விதவைகள் / தபுதாரர்கள் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிக்க வாய்ப்பு வழங்கப்படுவதை மற்றொரு சிறப்புப் பலனாகக் குறிப்பிடலாம்.