ஓய்வூதியத் திணைக்களத்திடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் சேவையில் இருந்து ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகியும் இன்னும் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இத்தகைய நிலைமைக்கு என்ன காரணம்?
- ஓய்வூதியம் செலுத்துவதைத் தொடங்குவதற்கு, நீங்கள் கடைசியாகப் பணியாற்றிய நிறுவனத்தால் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு இயங்கலை முறைமை மூலம் ஓய்வூதியத்திற்கான பிடி 03 விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். இருப்பினும், ஓய்வூதியத்திற்கான உங்கள் விண்ணப்பம் பல மாதங்கள் கடந்த பின்னரும் நிறுவனத்தால் அனுப்பப்படாமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட காலதாமதத்துடன் அனுப்பப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதும் தாமதமாகும். எனவே, ஓய்வூதியத்திற்கான உங்கள் விண்ணப்பத்தை அனுப்பும் திகதி குறித்து நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் விசாரணை செய்ய வேண்டும்.
ஓய்வூதியத்திற்கான எனது விண்ணப்பம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வந்துள்ளது என்பதற்கான ஒப்புதலை எவ்வாறு பெறுவது?
- ஓய்வூதியத்திற்கான உங்கள் விண்ணப்பம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன், இது தொடர்பாக உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். மேற்கூறியவற்றைத் தவிர, ஓய்வூதியத் திணைக்களத்தின் இணையதளத்தில் ‘Pensioner’ பொத்தானைக் கிளிக் செய்யவும். மேலும், ‘Information on Pensions Applications’ என்பதன் கீழ் உங்களின் தே.அ.அ இலக்கத்தை தட்டச்சு செய்வதன் மூலம் விண்ணப்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.
ஓய்வூதியத் திணைக்களம் அனுப்பிய குறுந்தகவல் எனக்கு வரவில்லை.
- ஓய்வூதியத் திணைக்களம், ஓய்வூதிய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்புவதோடு, தவறான தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தல், கையடக்கத் தொலைபேசியில் எற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால் திணைக்களம் அனுப்பும் குறுந்தகவல் சரியாக தங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
ஓய்வூதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு ஓய்வூதியத்தைப் பெற எவ்வளவு காலம் ஆகும்?
- ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம், கடைசியாக அலுவலர் பணியாற்றிய நிறுவனத்தால் எந்தக் குறைபாடுகளும் இன்றி, சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆரம்பிக்கப்படும்.
ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான நேர்காணலுக்கு ஓய்வுபெற்ற அலுவலர்களை அழைப்பதற்குப் பிரயோகிக்கப்படும் செயல்முறை என்ன?
- ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான நேர்காணலின் திகதி, இடம் மற்றும் நேரம் குறித்து ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு குறுந்தகவல் மூலம் கட்டாயமாக தெரிவிக்கப்படும்.
முதல் ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான நேர்காணல் நடைபெறும் இடங்கள் யாவை?
இந்த நேர்காணல்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடத்தப்படும். ஓய்வு பெற்ற அலுவலர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பொது அவர்களுக்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
- ஓய்வூதிய திணைக்களத்தின் தலைமை அலுவலகம்- மாளிகாவத்தை, கொழும்பு 10
- மாவட்ட செயலகம், குருநாகல்
- மாவட்ட செயலகம், மாத்தறை
- மாவட்ட செயலகம், கண்டி
- மாவட்ட செயலகம், பதுளை
- மாவட்ட செயலகம், அனுராதபுரம்
ஓய்வூதியத்தை செயல்படுத்துவதற்கான நேர்காணலில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
- விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கான உரிமைக்கான கொடைப்பத்திரம் வழங்குதல்
- ஓய்வூதியருக்கு அடையாள அட்டை வழங்குதல்
- ஓய்வூதியரின் விரல் அடையாளங்களைப் பெறுதல்
- ஓய்வூதியத்தை செயல்படுத்துதல்