அறிமுகம்

ஓய்வூதியம் வழங்கும் அதிகாரத்தை நிறுவனத் தலைவரிடம் வழங்குவதற்குப் பதிலாக அவ் அதிகாரத்தை ஓய்வூதியத் திணைக்களத்திடமே வைத்திருப்பது மையப்படுத்தப்பட்ட முறைமை மூலம் ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிறப்பாகும்.

எனவே, மையப்படுத்தப்பட்ட முறைமையின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.

3/2015 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் திருத்தம் (III) இன் படி, மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பிரிவுக்கு ஓய்வூதியர்களுக்கான முதல் ஓய்வூதிய விண்ணப்பத்தை கணினி மயமாக்கப்பட்ட இயங்கலை மூலம் மற்றும் இயங்கலை அல்லாத முறையின் மூலம் அனுப்பப்பட வேண்டும். 2006.01.01 ஆம் திகதிக்கு முன் ஓய்வு பெற்றிருந்தால், விண்ணப்பங்கள் இயங்கலை அல்லாத முறையின் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

மையப்படுத்தப்பட்ட முறைமை  மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள்

  • ​பதவி நீக்கம் செய்யப்படுவதால் அல்லது நிறுவனம் மூடப்படுவதால் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 7).
  • 30/1988 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் மற்றும் 12/2009 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு  பெறச் செய்யப்படும் போது (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 14).
  • ஒழுக்காற்று அடிப்படையில் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 12)
  • திறமையின்மை மற்றும் அனுதாப அடிப்படையில் அலுவலர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்படும் போது
  • நாளாந்த / அமய / பதிலீட்டு / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து 45 வயதிற்குப் பிறகு நிரந்தர நியமனம் பெற்ற அலுவலர்கள் மற்றும் சேவையின் போது 10 ஆண்டுகளுக்கு மேல் சம்பளமற்ற விடுமுறை பெற்ற அலுவலர்கள் ஓய்வு பெறும்போது  (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17).
  • நிரந்தர விடுவிப்பில் ஓய்வு பெறுதல் (ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 48).
விண்ணப்பங்களை இயங்கலை அல்லாத முறைமையில் மாத்திரம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள்
  • 04/2006 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது
  • 07/2004 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு பெறச் செய்யப்படும் போது
  • 1980 ஜூலை வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு 60 வயதை எட்டியவுடன் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது
  • 44/1990 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு பெறச் செய்யப்படும் போது 
  • 08/2015 ஆம் இலக்க  ஓய்வூதிய சுற்றறிக்கையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது
  • ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் "ட" அட்டவணையின் கீழ் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது
  • அலுவலர்கள் முப்படைகளில் இருந்து ஓய்வு பெற்று (முன்னாள் ராணுவ வீரர்கள்) பின்னர் முப்படைகள் அல்லாத அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு ஓய்வு பெறும்போது
  • சேவை பணிக்கொடை (10 ஆண்டுகள் சேவைக் காலத்தை முடிக்காத அலுவலர்கள்)
விண்ணப்பங்களை அனுப்பும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
/**/
பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளல்விண்ணப்பம்விண்ணப்பங்களை அனுப்பும் முறைவிண்ணப்பங்களை அனுப்புவதற்குப் பொருந்தும் சுற்றறிக்கைகள்சந்தர்ப்பம்
முதல் ஓய்வூதியம் தயாரித்தல் பிடி03 இயங்கலை

இயங்கலை அல்லாத முறை
3/2015 (III) ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை

3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை
2006.01.02 க்குப் பிறகு ஓய்வு பெற்றால்

2006.01.02 க்குப் பிறகு ஓய்வு பெற்றால்
ஓய்வூதியத்தின் திருத்தங்கள் பிடி06 இயங்கலை

இயங்கலை அல்லாத முறை
5/2022 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை

9/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை

3/2016 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை
2006.01.02 க்குப் பிறகு ஓய்வு பெற்றால்

2007.06.30 க்கு முன் ஓய்வில் அனுப்பப்பட்ட மற்றும் ஓய்வுக்குப் பிறகு இறந்தவுடன் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அலுவலர்களுக்கு
வாரிசுகளுக்கான கொடுப்பனவுகள் பிடி03 இயங்கலை அல்லாத முறை 7/2022 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அலுவலர் இறந்துவிட்டால், பணிக்கொடை அல்லது சம்பள நிலுவைத் தொகை அல்லது இரண்டுக்கும் உரிமையுள்ளவர்களாக வாரிசுகளை உருவாக்குதல்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline